Monday, April 30, 2018

புதுமைப்பித்தனும் ஆண்டன் செகாவும்

புதுமைப்பித்தனின் "கல்யாணி "(1935) , ரஸ்ய எழுத்தாளர் ஆண்டன் செகாவின் "நாயுடன் வந்த பெண்" (The Lady with the dog) சிறுகதையையும் ஆங்கிலத்தில்  (1899) ஒருசேர வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

மேலோட்டமாக இரண்டு கதைகளையும்  பார்த்தால், திருமண வாழ்வில் திருப்தி அடையாத குடும்பப் பெண்களின் வாழ்வில் நுழையும் ஒர்
ஆணை அவர்கள் எதிர்கொள்வது தான் கதை.

இந்த இரண்டு கதைகளுக்கும் நடுவில் ஏறக்குறைய தலைமுறை இடைவெளி இருக்கிறது. இப்படித் தலைமுறைகள் மாறினாலும் சில
விசயங்களில்  மனிதர்களின் போக்கும் உளவியலும் ஒரேமாதிரியாக இருக்கிறது என்பது புரிகிறது.  அதாவது  எளிய மனிதர்கள் என்றும் புறத்தூண்டல் வயப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்
உலகம் சொல்லும் இலட்சியவாதம் எனும் பொதுபுத்தியில் இருந்து விலகியிருக்க வாய்ப்பிருக்கிறது.

அதுபோல  பெண்களும் எப்போதும் நாம் எதிர்பார்க்கிறபடி நடந்துகொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை; அவர்களுடைய நினைப்பும் போக்கும் தனித்தன்மை உடையதாக இருக்கக்கூடும் என்பதையும் இரண்டு கதைகளும் உணர்த்துகின்றன.

இரண்டு கதைகளும்  இணையத்தில் கிடைக்கிறது. வாய்ப்பிருந்தால்
வாசியுங்கள்.

http://www.chennailibrary.com/ppn/story/kaliyaani.html
http://lekhabooks.com/novels/501-naayudan-vantha-penn

Wednesday, April 18, 2018

அந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி

அந்திமழை மாத இதழ் முன்னெடுக்கும் நூல் அறிமுக/விமர்சனப் போட்டி  

இந்தப் போட்டியில் பங்குபெற தமிழ் கூறும் வாசக/எழுத்தாள நண்பர்களை பங்கேற்குமாறு அந்திமழை அழைத்து மகிழ்கிறது.

பரிசு விவரங்கள்:

•         முதல் பரிசு – ரூ.10000
•         இரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு]
•         மூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் 10 பேருக்கு.
•         நான்காம் பரிசு – ரூ.300 மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் 20 பேருக்கு.
•         ஐந்தாம் பரிசு – ரூ.200 மதிப்புள்ள பரிசு 100 பேருக்கு.

போட்டிக்கான விதிமுறைகள்:

•         படைப்புகள் வந்து சேர கடைசி தேதி : 15/6/2018.
•         போட்டிக்கு அனுப்பப்படும் விமர்சனங்கள் நூல் அறிமுகங்கள் 300 முதல் 600 சொற்களுக்குள் மிகாமல் இருக்க வேண்டும்.
•         நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
•         போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் திருப்பி அனுப்பப்படமாட்டாது.
•         தேர்வு செய்யப்பட்ட விமர்சனங்களின் பிரசுரம் சம்பந்தமான அனைத்து உரிமைகளும் அந்திமழைக்கே.
•         விமர்சனம் அனுப்புவோர் தங்கள் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
•         விமர்சனங்கள் யுனிகோட் எழுத்துருவில் இருக்க வேண்டும்.
•         விமர்சனங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : andhimazhaimagazine@gmail.com
•         அஞ்சல் முகவரி: ஜி, எலிம் ரெசிடென்சி, நெ.29, அன்புநகர் பிரதான சாலை, வளசரவாக்கம், சென்னை-87. போன்: 044-24867540

Tuesday, April 17, 2018

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்

Confessions of an Economic  Hit Man ( தமிழில் “ஒரு பொருளாதாரஅடியாளின் வாக்குமூலம்”)நான் சமீபத்தில் வாசித்து பிரமித்த ஒரு புத்தகம்.
கடந்த நூற்றாண்டுகளில் இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், டென்மார்க் போன்ற பல மேற்கத்திய நாடுகள் காலனியாதிக்கம் எனும் பெயரில் மற்ற நாடுகளின் மேல் ஆதிக்கம் செலுத்தியது என்பது நாம் அனைவரும் தெரிந்த வரலாறு. 

அதுபோல, இந்த நூற்றாண்டில் அந்நிய முதலீடுகள், வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், தாராளமயமாக்கம் எனும் பெயரில் அவை மறுவடிவம் பெற்றிருப்பதை ஆசிரியர் இதில் ஆதாரப்பூர்வமாக சொல்கிறார். அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்றில் பெருளாதார நிபுணராக வேலை செய்யும்  அவர் 1980களில் கிழக்கு ஆசிய, தென் அமெரிக்க நாடுகளில் முதலீடு செய்ய  பயணம் செய்கிறார். அப்போது வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக செய்யப்படும் சமரசங்கள், அதன் இன்றைய நிலை என தனது அனுபவங்களை விரிவாகவே சொல்கிறார். உண்மையில் அந்நிய முதலீடுகளின் உள்ளார்ந்த அரசியலை,  அவர் வெளிப்படையாக உடைத்திருக்கிறார். 

இந்த நூல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.  நான் வாசித்தது இதன் ஆங்கில பதிப்பு.

தமிழில்  “ஒரு பொருளாதாரஅடியாளின் வாக்குமூலம்” என்ற பெயரில் இரா.முருகவேள் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். வாய்ப்பிருப்பவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒன்று.

Saturday, April 14, 2018

வனநாயகன் குறித்து-8

வனநாயகன் குறித்து வந்த ஒரு வாசகர் கடிதத்தை நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

*********************************
hi 

vanakkam...

it was very interesting to read your novel. i thank facebook because of
which i got to know you personally. your writing and reading both are 
admirable and inspiring.

the story was told in a picturesque manner. as part of the story i could
know so much about malaysia, the land, the people, the culture, the 
problems etc, the various characters were built nicely. particularly sudha
was a very impressive person with his attitude, approach and capability.
when he determines to find the truth behind the happenings the reader 
is with him. all the more when he is offered retnetion and he leaves the
country for good, he stands tall. the various characters....
....

with regards.
vijayalakshmi.

*********************************
எனது படைப்புகளைத் தொடரந்து வாசித்து, கருத்துகளைப் பகிர்ந்து உற்சாகப்படுத்தும் வாசகநண்பர்களுக்கு நெஞ்சம் நிரம்பிய நன்றிகள் !!


வனநாயகன் தொடர்பாக..
வனநாயகன் – மலேசிய நாட்கள் (நாவல்)
ஆரூர் பாஸ்கர்,

கிழக்கு பதிப்பகம்,
பக்கங்கள் 304, விலை ரூ.275
நூலை இணையவழியே வாங்க:
வனநாயகன் – மலேசிய நாட்கள்
https://www.nhm.in/shop/9788184936773.html
அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:
https://www.amazon.in/dp/B06X9VTR71?_encoding=UTF8&keywords=vananayagan&qid=1487947428&ref_=sr_1_1&s=digital-text&sr=1-1
#வனநாயகன்

Tuesday, April 3, 2018

அழியாச் சுடர் - ஜி.நாகராஜன்

'மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்' என எழுதி நம்மில் நீங்காத இடம்பிடித்த
எழுத்தாளர் ஜி.நாகராஜன் குறித்த "அழியாச் சுடர்" கட்டுரையை வாசித்தேன் (2017-டிசம்பர் தடம் இதழ்).

இதுவரை ஜி.நாகராஜனை வாசிக்காதவர்களையும் வாசிக்கத்தூண்டும் அருமையான கட்டுரை. கண்டிப்பாக பாதுகாக்கப்படவேண்டிய ஒன்று. ஒரு ஆளுமையைப் பற்றியும் அவருடைய படைப்புகளைப் பற்றியும் எப்படி எழுதவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளவாவது இந்தக் கட்டுரையை வாசிக்கவேண்டும். ஜி.நாகராஜனின் படைப்புகளை ஆழ்ந்து வாசித்த ஒருவரால் மட்டுமே இந்தப் பங்களிப்பைச் செய்திருக்க முடியும். அந்தவகையில் கட்டுரையை எழுதிய ஆசிரியர் சி.மோகன் பாராட்டுதலுக்கு உரியவர். கட்டுரைக்கு பொருத்தமான ஒவியம் கூட அருமை.

நல்ல இலக்கிய ஆளுமைகளை அடையாளம் காட்டும் தடம் இதழுக்கும் வாழ்த்துகள்!